சீனாவில் நிலக்கரி சுரங்கங்களில் பயங்கர விபத்து: 36 பேர் பலி

CHINAஉலகில் அதிக அளவில் நிலக்கரி உற்பத்தி செய்யும் நாடான சீனாவில், புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் நடந்த அடுத்தடுத்த விபத்துகளில் 36 பேர் பலியாகி உள்ளனர்.ஹெய்லாங்ஜியாங் மாகாணத்தில் உள்ள ஜியாஜியாங் நிலக்கரி சுரங்கத்தில் புதன்கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. உள்ளே வேலை செய்துகொண்டிருந்த 52 தொழிலாளர்களில் 33 பேர் வெளியேறிவிட்டனர். சுரங்க வாயிலை கடக்க முடியாதபடி தீ பற்றியதால் 19 பேர் வெளியில் வர முடியாமல் சிக்கிக்கொண்டனர். இவர்களில் ஒருவரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்று மீட்புக்குழு தெரிவித்துள்ளது.

வியாழக்கிழமை லியாவோனிங் மாகாணத்தின் ஹூலுடாவ் நகரில் உள்ள சுரங்கத்தில் தீப்பிடித்தது. இதில் 17 பேர் பலியாகினர். 10 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சீனாவில் தொடரும் சுரங்க விபத்துக்கள் பாதுகாப்பு குறித்த கவலைகளை அதிகரித்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply