விளாடிமிர் புதின் வலிமையான சக்தி வாய்ந்த தலைவர்: டொனால்ட் டிரம்ப்
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வலிமையான சக்தி வாய்ந்த தலைவர் என அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட ஆதரவு திரட்டிவரும் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.அண்மையில் இஸ்லாமியர்களை அமெரிக்காவுக்குள் நுழைய அனுமதிக்க கூடாது என கூறி சர்ச்சையில் சிக்கினார் டொனால்ட் டிரம்ப். அந்த கருத்திற்காக அமெரிக்காவில் மட்டும் அல்ல உலக முழுவதும் அவருக்கு எதிர்ப்பு அதிகரித்துவரும் நிலையில் நேற்று மாஸ்கோவில் செய்தியாளர்களிடம் பேசிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், டொனால்ட் டிரம்ப் திறமையான சிறப்புவாய்ந்த மனிதர் என்று கூறினார்.
தன்னை பற்றி புதினின் கருத்துக்கு பதில் அளித்துள்ள டொனால்ட் டிரம்ப் விளாடிமிர் புதின் வலிமையான சக்தி வாய்ந்த தலைவர் என்று புகழ்ந்து தள்ளியுள்ளார். மேலும் அவர் ”யாராவது உங்களை புத்திசாலி என்று புகழ்ந்தால் அது நல்ல விஷயம் தான். அதிலும் உங்களை புகழும் நபர் ரஷ்யாவின் தலைவர் என்றால் அதன் மதிப்பு இன்னும் அதிகம்” என்று தெரிவித்துள்ளார்.
ரஷ்ய அதிபர் புதின் பிற நாடுகள் மீது போர் தொடுப்பது, பத்திரிகையாளர்கள் மற்றும் அரசியல் எதிரிகளை கொல்வது போன்ற செயல்களில் ஈடுபடுவது பற்றி டொனால்ட் டிரம்பிடம் கேள்வி எழுப்பிய போது ’ரஷ்யா மட்டும் அல்ல அமெரிக்காவும் அது போன்ற செயல்களில் ஈடுப்பட்டு வருகிறது’ என்று வெளிப்படையாக கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply