சிரியாவில் இஸ்ரேல் நடத்திய விமானப்படை தாக்குதலில் சர்வதேச தீவிரவாதி சமீர் காந்தர் பலி

sameerசிரியாவில் இஸ்ரேல் விமானப்படைகள் நடத்திய தாக்குதலில், அமெரிக்காவால் சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கப்பட்ட லெபனான் தீவிரவாத தலைவன் சமீர் காந்தர் பலியானான். சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக உலக நாடுகளின் படை தாக்குதல் நடத்திவருகிறது. இவ்வகையில், சிரியா தலைநகர் டமாஸ்கஸில் உள்ள குடியிருப்பு பகுதியில் இஸ்ரேல் விமானப்படை நடத்திய தாக்குதலில் லெபனான் தீவிரவாத தலைவன் சமீர் காந்தர் உயிரிழந்தான் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

சமீர் கொல்லப்பட்டதை லெபனான் ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்பு உறுதிசெய்துள்ளது. சமீர் காந்தர் கொல்லப்பட்டிருப்பதை சிரியா அதிபரின் ஆதரவு படையும் உறுதிசெய்துள்ளது.

தீவிரவாதி சமீர் காந்தர் கொல்லப்பட்டதை வரவேற்றுள்ள இஸ்ரேல், சாவுக்கான தாக்குதலை நடத்தியது இஸ்ரேல்தான் என்பதை உறுதிசெய்யவில்லை. சமீர் காந்தரின் உடல் டமாஸ்கஸ் நகர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

சமீர் காந்தர் பயங்கரமான தீவிரவாதி என்று இஸ்ரேல் அறிவித்து இருந்தது. இஸ்ரேல் சிறையில் இருந்து கைதிகள் மாற்றத்தின் போது வெளியே வந்தபின்னர் லெபனான் ஹிஸ்புல்லா தீவிரவாத இயக்கத்தின் தலைவனாக சமீர் திகழ்ந்து வந்தான். இந்தப்படை சிரியா சென்று, அதிபர் பஷார் அல்ஆசாத் ஆதரவு படையினருடன் இணைந்து, கிளர்ச்சியாளர்களை எதிர்த்து சண்டையிட்டு வருகிறது. தற்போது, இஸ்ரேல் வான்தாக்குதலில் கொல்லப்பட்டுள்ள சமீர் காந்தர், கடந்த செப்டம்பர் மாதம் 8-ந் தேதி அமெரிக்காவால் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டவன் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply