இந்தியப்படகை எரித்துக் கவிழ்த்த பாகிஸ்தான்: 70 மீனவர்கள் கைது, 11 படகுகள் பறிமுதல்
குஜராத் மாநிலத்தின் சர்வதேச கடற்பகுதியில் மீன்பிடித்த 71 மீனவர்களை பாகிஸ்தான் கடல் பாதுகாப்பு முகமை கைது செய்துள்ளதாக அகமதாபாத் மீனவர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இது குறித்து, தேசிய மீனவ தொழிலாளர்கள் மன்ற செயலாளர் மனீஷ் லோதாரி கூறுகையில், “குஜராத்தின் ஜகவ் கடற்பகுதியில் 12 படகுகளில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 70 மீனவர்களை பாகிஸ்தான் கடல் பாதுகாப்பு முகமை(MSA) நேற்று கைது செய்துள்ளது. மேலும் அவர்களது 11 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது. இதில் ஒரு படகு பாதுகாப்பு படையினரால் எரிக்கப்பட்டு கடலில் மூழ்கியுள்ளது, மூழ்கிய படகில் இருந்த மீனவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர். என்ன காரணத்திற்காக இந்த தாக்குதல் நடைபெற்றது என்பது குறித்த விவரங்கள் எதுவும் தெரியவில்லை. கைது செய்யப்பட்ட மீனவர்களும் அவர்களின் படகுகளும் கராச்சி கொண்டு செல்லப்பட்டுள்ளது.” என்றார்.
மேலும் இந்த சம்பவம் குறித்து, இந்திய கடற்படை மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நேற்று காலை நடந்த இந்த சம்பவம் அப்பகுதிக்கு அருகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மற்றொரு மீனவராலே வெளிச்சத்திற்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply