பொட்டு அம்மானின் அதிநவீன வசிப்பிடம் படையினரிடம்
புதுக்குடியிருப்பு, இரணைப்பாளை பிரதேசத்தில் அமைக்கப்பட்டிருந்த புலிகளின் புலனாய்வுத் துறை தலைவர் பொட்டு அம்மானின் பிரதான இருப்பிடத்தை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியுள்ளனர். இரணைப்பாலையின் தென்பகுதியில் பாரிய தேடுதல்களை மேற்கொண்ட இராணுவத்தின் 58வது படைப் பிரிவினர் இந்த பாதுகாப்பு இல்லத்தை கைப்பற்றியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். பொட்டு அம்மான் மற்றும் கபில் அம்மான் என்ற புலிகளின் மிக முக்கியஸ்தர்கள் இருவருமே இந்த பாதுகாப்பு இல்லத்தை பயன்படுத்தியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த இல்லத்திலிருந்தே இவர்கள் பயங்கரவாத நடவடிக்கைகளையும் திட்டங்களையும் தீட்டியுள்ளனர்.
புலிகளின் அதி உயர் பாதுகாப்பு வலயமான இரணைப்பாலை பிரதேசத்திலேயே பொட்டு அம்மானின் இந்த பாதுகாப்பு இல்லம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த இல்லத்தை முழுமையாக பாதுகாக்கும் வகையில் புலிகள் பாரிய மண் மூட்டைகளால் மறைத்துள்ளனர். இந்த வீட்டை சுற்றியும் பாரிய பாதுகாப்பு அரண்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இராணுவத்தின் 58வது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சவேந்திர சில்வா தலைமையிலான படையினர் மேற்கொண்ட இந்த பாரிய தேடுதலின்போது அந்த பாதுகாப்பு இல்லத்தை அண்மித்த பகுதியிலிருந்து ஜீப் வண்டி ஒன்றையும் கண்டெடுத்துள்ளனர்.
பொட்டு அம்மானே இந்த ஜீப் வண்டியை பயன் படுத்தியுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை பெரும் எண்ணிக்கையிலான மிதிவெடிகளையும் இராணுவத்தினர் இந்தப் பிரதேசத்திலிருந்து கண்டெடுத்துள்ளனர் என்றும் பிரிகேடியர் தெரிவித்தார்.
புலிகளின் அதி உயர் பாதுகாப்பு பிரதேசமான இரணைப்பாலையிலிருந்து புலிகளின் மேலும் பல முக்கிய உபகரணம் இருக்கக்கூடும் என்ற அடிப்படையில் படையினர் தொடர்ந்தும் தேடுதல்களை மேற்கொண்டு வருவதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply