தமிழ் மக்கள் பேரவையை வரவேற்கிறார் : கருணா

karunaதமிழ் மக்கள் பேரவை’ தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள கருணா, “பல கட்சிகள் கூட்டான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஓர் அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட வேண்டும் என்று பல தரப்பினராலும் நீண்டகாலமாக வலியுறுத்தப்பட்டு வந்தது. எனினும், தலைமைப்பீடம் இதற்குப் பச்சைக்கொடி காட்டவில்லை. கூட்டமைப்புக்குள் ஒரு கட்சியின் எதேச்சாதிகாரத்தை நிலைநாட்டுவதற்கு முயற்சிகள் எடுக்கப்படுவதாலும், மக்களின் ஆணைக்குப் புறம்பான வகையில் மத்திய அரசுடன் உறவு வைத்திருப்பதாலுமே புதியதொரு அமைப்பு உருவாகியுள்ளது. இந்தக் கூட்டணியை நான் வரவேற்கிறேன். புதிய அமைப்பின் உருவாக்கம் தொடர்பில் குற்றச்சாட்டை மாத்திரம் முன்வைக்கக்கூடாது.

 

ஏன் இவ்வாறானதொரு அமைப்பு உருவாகியது, அதற்கான காரணம் என்ன என்று ஆராயப்பட வேண்டும். புதிய கூட்டணியின் முற்போக்கான சிந்தனைகளை வரவேற்கிறேன். அதன் நோக்கம், செயற்பாடு, கொள்கை தொடர்பில் கவனம் செலுத்தி வருகிறோம். அத்துடன், கிழக்கு மாகாணத்தையும் உள்வாங்கும் வகையில் மேற்படி அமைப்பு விஸ்தரிக்கப்பட வேண்டும். இதில் இணையுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டால் அது தொடர்பில் சாதகமாக பரிசீலிக்கப்படும் என்றார்.

 

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply