மஹிந்த ராஜபக்ஷ கைது செய்யப்பட வேண்டும் :கலாநிதி விக்ரமபாகு கருணாரத்ன
முன்னாள் ஜனாதிபதியும், பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ கைது செய்யப்பட்டு தண்டனை வழங்கப்படவேண்டும் என கலாநிதி விக்ரமபாகு கருணாரத்ன தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போய் 2000 நாட்கள் கடந்துள்ள நிலையில், விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் கலந்துகொண்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற பாரிய குற்றங்களுக்கு மஹிந்த ராஜபக்ஷ காரணம் என விக்ரமபாகு கருணாரத்ன குறிப்பிட்டார்.
குறித்த ஊடகவியலாளர் சந்திப்ப்பு பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொடவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply