ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனுக்கு பாராட்டு தெரிவித்து கருணாநிதி கடிதம்

karunaஜல்லிக்கட்டு போட்டி இந்த ஆண்டு நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனுக்கு பாராட்டு தெரிவித்து கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார். தி.மு.க. தலைவர் கருணாநிதி மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:- நேற்று (புதன்கிழமை) மாலையில் கலைஞர் தொலைக்காட்சியில், ‘ஜல்லிக்கட்டு போட்டிகளை இந்த ஆண்டு பொங்கல்திருநாளையொட்டி நடத்த எந்த வகையிலாவது நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று நீங்கள் கூறியதைக் கேட்டு மகிழ்ச்சியடைந்தேன்.

 

தமிழர் திருநாள், பொங்கல் நாள், புத்தாண்டு தொடக்கம் என்பதையொட்டி தமிழர்களின் பண்டைய வீரத்தை பிரதிபலிக்கும் வகையில்

 

ஜல்லிக்கட்டு விளையாட்டு தமிழகத்தில் பன்னெடுங்காலமாக நடைபெற்று வருவதை தாங்கள் நன்றாகவே அறிவீர்கள்.

 

தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது 2007-ம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு நீதி மன்றத்தால் விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டு

 

போட்டிகள் அரசு நிர்வாகத்தின் கண்காணிப்பில் நடத்தப்பட்டன.

 

அதைப்போலவே 2008-ம் ஆண்டும் தி.மு.க. அரசால் முழு வீச்சில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு உச்சநீதிமன்றம் விதித்திருந்த தடை

 

விலக்கிக் கொள்ளப்பட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.

 

2009-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நெறிப்படுத்துவதற்கென சட்டம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. ஆனால்

 

ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கு தடை விதிக்கப்படுகிறது என்று கடந்த ஆண்டு மே மாதம் 7-ந் தேதி உச்சநீதிமன்றம்

 

தீர்ப்பளித்ததோடு, தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தையும் உச்சநீதிமன்றம் ரத்து செய்துவிட்டது.

 

இந்த நிலையில் தாங்களே பிரதமரை நேரில் சந்தித்து, ஜல்லிக்கட்டு எந்தவிதமான இடையூறுமின்றி இந்த ஆண்டும் நடைபெறத்

 

தேவையான முயற்சிகளை எல்லாம் உடனடியாக எடுப்பீர்கள் என்று நம்புகிறேன்.

 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply