சுனாமிப்பேரலை உயிரிழந்தோரை நினைவுகூரி நாளை மதவைபவங்கள்
சுனாமி அனர்த்தத்தால் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் நிகழ்வுகள் நாளை(26) நாட்டின் பல பகுதிகளில் நடைபெறவுள்ளன. வடக்கு, கிழக்கு மற்றும் தென் மாகாணத்தின் பல இடங்களில் சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கான நினைவு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் மதவழிபாட்டுத் தலங்களில் விசேட அனுஷ்டானங்களும் இடம்பெறவுள்ளன. உயிரிழந்தவர்களுக்காக அமைக்கப்பட்டிருக்கும் நினைவுத் தூபிகளில் மலரஞ்சலி நிகழ்வுகளும், அன்னதான நிகழ்வுகளும் பல இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் திகதி ஏற்பட்ட சுனாமிப் பேரலைத் தாக்கத்தால் நாடு பாரியதொரு அழிவைச் சந்தித்திருந்தது. சுமாத்திரா தீவுகளுக்கு அருகில் கடலுக்கடியில் உள்ள நிலப்பரப்பில் ஏற்பட்ட பாரிய பூமியதிர்ச்சியின் எதிர்த்தாக்கமாக சுனாமிப் பேரலை ஏற்பட்டது. இந்த அனர்த்தத்தில் 30,196 பேர் உயிரிழந்ததுடன், 21,411 பேர் காயமடைந்தனர்.
இப்பேரனர்த்தத்தில் அம்பாறை மாவட்டத்தில் மாத்திரம் சுமார் 5000ற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்ததுடன், கொழும்பிலிருந்து மாத்தறை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த ரயில் பேரலைக்குள் சிக்கியதில் 1700 பேர் உயிரிழந்தனர். இது மாத்திரமன்றி பல கோடி பெறுமதியான சொத்துக்கள் அழிவடைந்தன. இந்த அனர்த்தம் ஏற்பட்டு 11 வருடங்கள் பூர்த்தியடைந்துள்ள நிலையில் உயிரிழந்த உறவுகள் நாளையதினம் நினைவுகூரப்படவுள்ளனர்.
இந்த எழுத்துருவை பயன்படுத்த அனுமதி தந்த திரு ஆவரங்கால் திரு சிறீவாஸிற்கு எனது நன்றிகள்
தாயக கவிஞர் திரு புதுவை இரத்தினதுரையின் மானுடக் கவிதைகளுக்கு இந்த செயலி சமரப்பணம்
சுரதா யாழ்வாணன் 27.12.02
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply