இயேசுவின் ஈகை சிந்தனையில் பாதிக்கப்பட்டோருக்கு உதவுவோம் : ஜனாதிபதி மைத்திரிபால

maithiriநத்தார் பண்டிகை இரண்டாயிரம் வருடங்களுக்கும் மேலாக நீடிக்கும் அன்பு மற்றும் அறம் பற்றிய பாடங்களை எமக்குப் போதிக்கும் ஒரு பலமான குரலைக்கொண்ட இயேசுவின் பிறப்பைக் குறித்து நிற்கிறது. இயேசுவின் ஈகை சிந்தனையில் பாதிக்கப்பட்டோருக்கு உதவுவோம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இன்று (25) கிறிஸ்தவ மக்களனைவராலும் அனுஸ்டிக்கப்பட்டு வரும் நத்தார் தினத்தினை முன்னிட்டு வெளியிட்ட வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

 

இவ் வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, இயேசு பாலகர் செம்மறி ஆடுகளுக்கு மத்தியில் ஒரு தொழுவத்தில் பிறந்து இடையர்களே அவருக்கு முதல் முதல் காணிக்கை செலுத்தியதிலிருந்து மனிதாபிமானம், எல்லா உயிர்களிடத்திலும் அன்பு மற்றும் பணிவு பற்றிய கிறிஸ்தவச் செய்தியை கண்டுகொள்ளமுடியும். இயேசுவின் தத்துவம் நித்தியமானதும் பிரபஞ்சம் தழுவியதுமாகும்.

 

ஒருவரது நம்பிக்கைக்குப் புறம்பாக, நாம் எல்லோரும் எமக்கும் ஒருவர் மற்றவருக்கும் இந்த உலகில் உண்மையானதும் நீடித்ததுமான ஒரு மாற்றத்தைக் கொண்டுவரும் ஒரு கடமை உணர்வைக் கொண்டுள்ளோம். நத்தார் உணர்வையும் அது உட்பொதிந்துள்ள கொடை, பகிர்வு, மன்னிப்பு மற்றும் ஏனையவர்களைப் பராமரித்தல் ஆகிய மனிதாபிமான பெறுமானங்களை மனதிற் கொண்டு, இலங்கையில் முப்பது வருடகால போரின் போது பாதிக்கப்பட்ட மக்களை நாடிச் சென்று அவர்களது வாழ்க்கையைச் சிறப்பானதாக மாற்ற கைகொடுப்போம்.

 

இயேசுவின் பிறப்பு, அவர் இந்த உலகிற்கு வழங்கிய பிரபஞ்ச அன்பு, சகிப்புத்தன்மை மற்றும் பரஸ்பர புரிந்துணர்வு பற்றிய புதிய போதனைகளுடன் மானிட விடுதலைக்கான வழியைக்காட்டுகிறது. நத்தார் மணி எழுப்பும் நாத ஓசையும் பண்டிகைத் திருப்பாடல் ஒலிகளும் இப்பண்டிகையையும் இன்று நாம் அனுபவிக்கும் சுதந்திரத்தையும் குறித்து நிற்கிறது.

 

இலங்கைவாழ் கிறிஸ்தவ மக்களுக்கு மகிழ்ச்சியும் அமைதியும் நிறைந்த எனது நத்தார் வாழ்த்துக்கள் எனத் தெரிவித்துள்ளார்.

 

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply