சீனாவில் டி.வி.யில் செய்தி வாசிப்பாளராக பணிபுரியும் ரோபோ
சீனா டி.வி.யில் செய்தி வாசிப்பாளராக ‘ரோபோ’ பணிபுரிகிறது. இதனால் அறிவிப்பாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.‘ரோபோ’ என்றழைக்கப்படும் எந்திர மனிதனின் செயல்பாடு பல துறைகளிலும் அமல்படுத்தப்பட்டு வருகிறது. சீனாவின் ஷாங்காய் நகரில் உள்ள உணவு விடுதிகளில் உணவு சமைக்கிறது. ஆஸ்பத்திரிகளில் பணியாட்களாக பணிபுரிகிறது. அறுவை சிகிச்சைகளிலும் பயன்படுத்தப்படுகிறது.இதுபோன்று பல்வேறு துறைகளில் பணிபுரியும் ‘ரோபோ’ தற்போது செய்தி வாசிப்பாளராகவும் தனது பணியை தொடங்கியுள்ளது. அந்த ரோபோவுக்கு ‘ஸியோக்’ என பெயரிடப்பட்டுள்ளது.இது ஷாங்காய் டிராகன் டி.வி.யில் வானிலை அறிக்கை வாசிக்கிறது.
இனிமையான பெண் குரலில் அச்செய்தி வெளியாகிறது. முதன் முறையாக பேசிய ‘ரோபோ’ ‘‘வானிலை அறிக்கையை வாசிப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்’’ என தனது இனிமையான குரலில் தொடங்கியது. இது அங்கு பணிபுரிபவர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. டி.வி. துறையிலும் ‘ரோபோ’க்களின் ஆதிக்கம் தொடங்கி விட்டதால் அங்கு பணிபுரியும் அறிவிப்பாளர்கள் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply