ஊழல்வாதிகள் குடும்பங்களுடன் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்ல முயற்சி
கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் பாரியளவில் ஊழல்கள் மற்றும் மோசடிகளில் ஈடுபட்டவர்கள் இரகசியமான முறையில் குடும்பங்களுடன் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்று அங்கு குடியேற முயற்சித்து வருவதாக பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். நாட்டை விட்டு இரகசியமாக வெளியேறி வெளிநாடுகளில் குடியேறுவதற்கான முயற்சிகளில் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் ஈடுபட்டுள்ளனர். கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற பாரியளவிலான ஊழல் மோசடியொன்றுடன் தொடர்புடையதாக குற்றம் சுமத்தப்பட்ட பெண் அதிகாரியொருவர் ஏற்கனவே இவ்வாறு இரகசியமாக நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
பாரியளவு நிதி மோசடிகள் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவில் இந்த பெண் அதிகாரி சில தடவைகள் முன்னிலையாகி சாட்சியமளித்திருந்தார்.
இதேவிதமாக கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட தரப்பினர் இரகசியமான முறையில் குடும்பங்களுடன் நாட்டை விட்டு வெளியேறுவதற்கான தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர் என புலனாய்வுப் பிரிவினர் தெரிவிக்கின்றன.
பல்வேறு ஊழல் மோசடிகள் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்ட அரசாங்க அதிகாரிகள் இவ்வாறு இரகசியமான முறையில் நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் குடியேறினால் இந்தக் குற்றச் செயல்கள் தொடர்பிலான விசாரணைகளை கிரமமான முறையில் நடாத்த முடியாத நிலைமை ஏற்படும் என பொலிஸ் தரப்பு தகவல்கள் அச்சம் வெளியிட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply