அமைச்சர் ரிஷாத்தின் சவாலை ஆனந்த தேரர் ஏற்பு

resadதன்மீது சுமத்தப்பட்ட அவதூறுகளை நிரூபிக்க பகிரங்க விவதாத்திற்கு வருமாறு அமைச்சர் றிசாத் பதியுத்தீன், மாத்தறை ஆனந்த தேரருக்கு விடுத்த பகிரங்கச் சாவாலை தேரர் ஏற்றுக் கொண்டுள்ளார். இதனையடுத்து ஆனந்த தேரருடன் விவாதிப்பதற்கு தான் தயாரென அமைச்சர் ரிஷாத் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 28ஆம் திகதி திங்கட்கிழமை தனியார் தொலைக்காட்சி ஒன்றில் விவாதத்தை நடத்த ஏற்பாடாகியுள்ளது.

வில்பத்துக் காட்டை அழித்து முஸ்லீம்களை அமைச்சர் றிசாத் குடியேற்றுவதாகவும், வில்பத்து காட்டினை பயன்படுத்தி அமைச்சர் போதைப்பொருள் வியாபாரம்“ செய்வதாகவும் கடந்த சனிக்கிழமை விகார மாகாதேவி பூங்காவிற்கு முன்னால் இடம்பெற்ற ஆர்பாட்டத்தின்போது ஆனந்ததேரர் அமைச்சார் றிசாத் பதியுத்தீன் மீது குற்றம் சுமத்தியிருந்தார்

இதனை யடுத்து புதன்கிழமை கொழும்பில் அமைச்சர் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாட்டில் தன்மீதான குற்றச் சாட்டை முடியுமானால் நிருபீத்துக் காட்டுமாறும் இது தொடர்பில் நாட்டின் எந்தவொரு தொலைக்காட்சியிலும் தேரருடன் விவாதாம் நடத்த தான் தயார் என்றும் அமைச்சர் சாவால் விடுத்திருந்தார்

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply