சம்பந்தருடனான சந்திப்பில் புரிந்துணர்வு ஏற்பட்டது: விக்னேஸ்வரன்
தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனும் வடமாகாண முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரனும் வெள்ளியன்று மாலை நேரில் சந்தித்து பல மணிநேரம் பேசியதைத் தொடர்ந்து இருவருக்கும் இடையில் நிலவிய முறுகல் நிலை மாறி புரிந்துணர்வு நிலை ஏற்பட்டிருப்பதாகத் சி வி விக்னேஸ்வரன் தெரிவித்திருக்கிறார்.கொழும்பில் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தைகளில் “முரண் நிலைக்குக் காரணமான பல விடயங்கள் குறித்து, மக்களின் நலன்களை முதன்மைப்படுத்தி விரிவாகவும் சுமுகமாகவும் பேசப்பட்டதாக” விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
இந்தப் பேச்சுக்களையடுத்து தனக்கும் சம்பந்தனுக்கும் இடையில் “பல விடயங்களில் நல்ல புரிந்துணர்வு ஏற்பட்டிருப்பதாகவும், இருவரும் தொடர்பின்றியும் கருத்துக்களைப் பரிமாறாதிருந்தமையுமே தவறான புரிதல்கள் அல்லது முரண்பட்ட நிலைமைக்குக் காரணம் என்பதைத் தாங்கள் இப்போது உணர்ந்துள்ளதாகவும்” விக்னேஸ்வரன் கூறினார்.
அண்மையில் உருவாக்கப்பட்ட தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்திற்கு விக்னேஸ்வரன் தலைமை தாங்கியமை பற்றியும் இந்தச் சந்திப்பில் பேசப்பட்டிருக்கிறது.
தமிழ் மக்கள் பேரவையானது அரசியல் அமைப்பல்ல என்று கூறிய விக்னேஸ்வரன், இந்த அமைப்பு தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு எதிரானதல்ல என்பதை சம்பந்தனுக்கு தான் எடுத்துக் கூறியதையடுத்து மக்களுக்கு நன்மை செய்யத்தக்க காரியங்கள் பிழையானதல்ல என்பதை அவர் ஏற்றுக்கொண்டதாகவும் விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply