ஒவ்வொருவரது கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவன்னு சொன்னீங்களே அருண்ஜெட்லி அது என்ன ஆச்சு?: ராம் ஜெத்மலானி

raamநாட்டில் உள்ள ஒவ்வொருவரது கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவன்னு சொன்னீங்களே அருண்ஜெட்லி, என்ன ஆச்சு அந்த வாக்குறுதி என்று மூத்த வழக்கறிஞர் ராஜ் ஜெத்மலானி கேள்வி எழுப்பியுள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த போது அவர் இதனை தெரிவித்தார்.மேலும் ராம் ஜெத்மலானி பேசியதாவது:-

”மோடி அரசு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நாட்டின் நிதி மந்திரியாக அருண்ஜெட்லி எதையும் நிறைவேற்றவில்லை. வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள 90 லட்சம் கோடி ரூபாயை மீட்கவில்லை.

இந்தியாவில் ஒவ்வொருவரது வங்கி கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்யப்படும் என்று ஜெட்லி கூறினார். என்ன ஆச்சி அந்த வாக்குறுதி?

டெல்லி கிரிக்கெட் சங்க விவகாரத்தில், முறைகேடுகள் நடந்திருப்பதற்காக போதுமான முகாந்திரங்கள் உள்ளன. உண்மை மிகவும் சங்கடமாக உள்ளது.”

இவ்வாறு கூறினார்.

முன்னதாக, டெல்லி கிரிக்கெட் சங்க முறைகேடு விவகாரத்தில், கெஜ்ரிவால் அமைத்துள்ள விசாரணை கமிஷனுக்கு சுப்ரீம் கோர்ட்டு மூத்த வக்கீல் ராம் ஜெத்மலானி தலைமை ஏற்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply