உள்ளூாட்சி மன்றத் தேர்தலில் தனித்து களமிறங்கும் மஹிந்த அணி!
மஹிந்த ராஜபக்ச சார்பு ஒனறிணைந்த எதிர்கட்சியினர் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் புதிய கூட்டணி ஒன்றினை உவாக்கவுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. “அபே ஸ்ரீலங்கா பெரமுண“ அல்லது “அவ ஸ்ரீலங்கா ப்ரொன்ட்“(எமது இலங்கை முன்னணி) என்ற புதிய அரசியல் கூட்டணியை உருவாக்குவது தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தேசிய சுதந்திர முன்னணி, பொதுஜன ஐக்கிய முன்னணி, பிவிதுறு ஹெல உறுமய மற்றும் இடதுசாரி ஜனநாயக முன்னணி ஆகிய கட்சிகள் இணைந்து புதிய முன்னணியை உருவாக்குதற்கு தீர்மானித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மஹிந்த சார்பு அணியினர் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளதோடு, இதற்கு பலர் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் அதிகாரப் போராட்டம் காரணமாகவே உள்ளூராட்சி மன்றத் தேதர்தலை ஒத்திவைத்துள்ளதாக மற்றுமொரு தகவல் வெளியாகியுள்ளது.
எனினும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி பிளவின் விளிம்பில் இருப்பதாகவும், அதில் அங்கம் வகிக்கும் 15 பேர் தேசிய அரசாங்கத்தில் இணைந்துகொள்ளவுள்ளதாகவும் அமைச்சர் எஸ்.பீ.திஸாநாயக்க தெரிசவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply