விக்னேஷ்வரன் எமது இராணுவத்தை வணங்க வேண்டும் : ஹெல உறுமய
வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரன் குறைந்த பட்சம் ஒரு நாளைக்கு மூன்று வேளைகளாவது எமது இராணுவத்துக்கு தலைவணங்கி சாஸ்டாங்கம் செய்ய வேண்டும் என ஹெல உறுமயவின் தலைவர் கலாநிதி ஓமல்பே சோபித்த தேரர் தெரிவித்துள்ளார். விக்னேஷ்வரனின் உயிர் பாதுகாக்கப்பட்டதும் அவருக்கு முதலமைச்சர் பதவி கிடைக்கப் பெற்றதும் எமது இராணுவத்தினர் புலிப் பயங்கரவாதத்தை இல்லாதொழித்ததனால் ஆகும் எனவும் தேரர் மேலும் கூறியுள்ளார்.
இது இவ்வாறிருக்கையில், முதலமைச்சர் விக்னேஷ்வரன் வடக்கிலுள்ள இராணுவத்துக்கு வடிகான் துப்பறவு செய்யும் பொறுப்பையாவது வழங்க வேண்டும் எனக் கூறியிருப்பது அவரின் இனவாத சுயரூபத்தை வெளிக்காட்டுவதாகவும் தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
விக்னேஷ்வரன் இவ்வாறு இராணுவத்துக்கு கூறியிருப்பது, இராணுவத்தை அகௌரவப்படுத்துவதற்கேயாகும். குலவாத, கோத்திரவாதம் உயர்ந்த மட்டத்திலுள்ள தமிழ் சமூகத்துக்குள் வடிகான் துப்பறவு செய்வது மிக கீழ் மட்ட செயலாகவே கருதப்படுகின்றது. சக்கிளியர்கள் என்போரே இந்த வேலைக்கு பயன்படுத்துகின்றனர். இந்த வேலைக்கு அமர்த்துவதாக இராணுவத்தை சுட்டிக்காட்டுவது மிகக் கேவலமான ஒன்றாகும் எனவும் தேரர் கூறியுள்ளார்.
எமது இராணுவம் இந்த வேலையை செய்ய முன்னர் யாரோ ஒருவர் அந்த வேலையை செய்தே உள்ளனர். முதலமைச்சரின் இந்த கருத்தின் உண்மையான நோக்கம் மக்களின் அடிப்படைத் தேவையை நிறைவு செய்து கொடுப்பதல்ல. அவரின் நோக்கம் எமது இராணுவத்தை கேவலப்படுத்துவதாகும் எனவும் கலாநிதி ஓமல்பே சோபித்த தேரர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply