ஐ.எஸ் தீவிரவாதிகளின் தலையை துண்டித்து பொதுமக்களின் பார்வைக்கு வைத்த ஆப்கான் தீவிரவாதிகள்
ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் உள்ள அச்சின் மாவட்டத்தில் உள்ளூர் கிராம தீவிரவாத குழுவினர் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் ஐ.எஸ் தீவிரவாதிகள் 4 பேரின் தலையை துண்டித்து அங்குள்ள பிரதான சாலையில் மக்களின் பார்வைக்கு வைத்துள்ளனர். நாடாளுமன்ற துணை சபாநாயகர் ஹஜி சகிர் என்வரின் ஆதரவாளரான இவர்கள் கடந்த சில வாரங்களாக தலிபான் மற்றும் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக போராடி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த குழுவினர் 4 ஐ.எஸ் தீவிரவாதிகளின் தலையை துண்டித்து அவர்களின் தலையை கிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள ஒரு பிரதான சாலையில் மக்களின் பார்வைக்காக காட்சிக்கு வைத்ததாக உள்ளூர் அதிகாரிகள் நேற்று தெரிவித்துள்ளனர். இதையடுத்து அங்குள்ள மக்களுக்கு இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply