தமிழ் மக்கள் பேரவையில் துரோகிகள்- எதிரிகள் கூட்டு : ஒருபோதும் இணையோம் என்கிறார் ரெலோவின் தலைவர் செல்வம் எம்.பி

selvamஎதிரிகள்- துரோகிகள் கூட்டுடன் உருவாக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் பேரவையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான தமிழ் ஈழ விடுலை இயக்கம் (ரெலோ) ஒருபோதும் இணையாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார் அந்த இயக்கத்தின் தலைவரும் நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன். வவுனியாவில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற ரெலோவின் தலைமைக் குழுக்கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மேலும் பலப்படுத்த அயராது பாடுபடுவோம் என்றும், கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் ஜனநாயக வழியில் போராடி தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வை வென்றெடுப்போம் என்றும் அவர் கூறினார்.

 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையைக் காப்பதிலும், அதனை மேலும் பலப்படுத்தி, வலுப்படுத்துவதிலும் நாம் தீவிர அக்கறையும், ஈடுபாடும் கொண்டுள்ளோம்.சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்ட தமிழ் மக்கள் பேரவை காரணமாக ஏற்பட்டிருக்கும் நிலைமையை ஆராய்வதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுவை உடனடியாகக் கூட்டுமாறு அதன் தலைவரான இரா.சம்பந்தனிடம் நாங்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றோம். அவரும் அதை ஏற்றுக்கொண்டுள்ளார்.

 

மேலும் இந்தக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நான்கு கட்சிகளும் கலந்துகொண்டு விவாதித்து உகந்த முடிவுகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு ஆகும்” என்றுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply