விஜயகாந்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட வேண்டாம்: முதல்வர் ஜெயலலிதா அதிமுகவினருக்கு வேண்டுகோள்
தஞ்சையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் போது முதலமைச்சரின் படத்தை தேமுதிகவினர் அகற்றியதை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். புதுச்சேரியில் இன்று காலை விஜயகாந்த் தங்கி இருந்த ஹோட்டல் முன்பு அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதையடுத்து விஜயகாந்துக்கு எதிராக உருவ பொம்மை எரிப்பு போன்ற போராட்டங்களில் ஈடுபடவேண்டாம் என அதிமுக பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா கட்சி தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் அவர் கூறும்போது சட்டமன்ற தேர்தலில் மக்கள் விஜயகாந்துக்கு உரிய பாடம் புகட்டுவார்கள், எனவே நீங்கள் கடமை கண்ணியம் கட்டுப்பாட்டை உயிர் மூச்சாக கொண்டு மக்களுக்கான சேவையாற்றுங்கள், சட்டம் தன் கடமையை செய்யும் என்று கூறியுள்ளார்.
முன்னதாக ள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணத்தினை தமிழக அரசு வழங்கவில்லை எனக் கூறி, தேமுதிக சார்பில் தஞ்சாவூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தலைமை தபால் நிலையம் முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டார்.
அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையின் எதிரில், நகராட்சி பயணியர் நிழற்குடை பெயர் பலகையில் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவப்படம் இடம்பெற்றிருந்தது. அந்தப் படத்தை மறைத்து, விஜயகாந்தின் பேனரும் கட்டப்பட்டிருந்தது.
தொண்டர்கள் சிலர், விஜயகாந்த் பேனரை அகற்ற முயன்றனர். இதனால், அங்கு சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து, ஜெயலலிதாவின் படத்தை அகற்ற விஜயகாந்த் உத்தரவிட்டதால் பரபரப்பு நிலவியது.
இதையடுத்து, விஜயகாந்தின் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அதிமுக தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் இன்று அதிமுகவினர் யாரும் விஜயகாந்துக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபடவேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply