என்னிடம் தமிழரசுக்கட்சி விளக்கம் கோர முடியாது TNA : சித்தார்தன்
தமிழ் மக்கள் பேரவையின் கலந்துரையாடலில் பங்கேற்றமை தொடர்பில் தமிழரசுக்கட்சி தம்மிடம் விளக்கம் கோர முடியாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.எனினும் தன்னிடம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பே விளக்கம் கோர முடியும் எனவும், அவ்வாறு கோரரும் பட்சத்தில் அதற்கான பதிலை வழங்க தயாராக இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தமிழ் மக்கள் பேரவையின் கலந்துரையாடலில் பங்கேற்றமை தொடர்பில் விளக்கம் கோரப்படும் என நாடாளுமன்ற உறுப்பினரரும் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராசா தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசாவின் கருத்து தொடர்பில் பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்தொடரில் தாம் பங்கேற்றமை தொடர்பில் தமிழரசுக் கட்சி தன் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் விளக்கமும் கோர முடியாது என தர்மலிங்கம் சித்தார்த்தன் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை அவ்வாறு அவர்களும் விளக்கம் தேவைப்படுமாயின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுக் கூட்டத்திலேயே கேட்க முடியும் என தர்மலிங்கம் சித்தார்த்தன் மேலும் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply