விடுதலைப்புலிகள் 21 சதுர கிலோமீற்றருக்குள் மட்டுப்படுத்தப்பட்டு விட்டனர்:உதய நாணயக்கார

விடுதலைப்புலிகள் இன்று 21 சதுர கிலோமீற்றருக்குள் மட்டுப்படுத்தப்பட்டு விட்டனர். பளை, மாத்தளன் ஆகிய பகுதிகளுக்கு வடபகுதியில் படை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் புதுக்குடியிருப்பு பிரதேசதிலும் படை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இராணுவ பேச்சாளர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

இன்று ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்ற மாநாட்டில் பேசிய அவர் மேலும் தெரிவித்ததாவது :

“நேற்றைய தினம் வெலிக்கந்தை பிரதேசத்தில் நான்கு விவசாயிகள் ஆயுததாரிகளினால் சுட்டுக் கொல்லபட்டுள்ளனர். நான்கு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் பொலநறுவை வைத்தியசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மணிக்தெனிய கிராமத்திலுள்ள வயல்களில் இரவு நேர காவலில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் மீதே குறிப்பிட்ட ஆயுததாரிகள் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர்.

இவர்கள் விடுதலைப்புலிகளாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அப்பிரதேசத்தில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் தேடுதல் நடவடிக்கையினை ஆரம்பித்துள்ளனர்.

அதேவேளை நேற்று காலை 4.00 மணியளவில் வாகரை பிரதேசத்தில் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட தேடுதலில் 5 கிலோ கிராம் எடைகொண்ட கிளேமோர் குண்டு கைப்பற்றப்பட்டுள்ளது.

யுத்த பிரதேசத்திலிருந்து பாதுகாப்பு பிரதேசத்தை நோக்கி வரும் பொது மக்களின் தொகை அதிகரித்துள்ளது . இது வரையில் 55,286 பேர் பாதுகாப்பு வலயத்தை நோக்கி வந்துள்ளனர்.அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

இரணைப்பாலை தெற்குப் பகுதியில் படையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் பொட்டு அம்மானின் பாதுகாப்பு அரண் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply