நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை இருப்பதே சிறுபான்மை சமூகங்களுக்கு பாதுகாப்பானது
இந்த நாட்டிலே தேர்தல்முறை மாற்றம் செய்யப்படுவதைவிட நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை தொடர்ந்தும் இருப்பதே சிறுபான்மை சமூகங்களுக்கு பாதுகாப்பானது என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினரான செய்யித் அலிஸாஹிர் மெளலானா தெரிவித்துள்ளார். ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தில் 30.12.2015 புதன்கிழமை முற்பகல் நடைபெற்ற விஷேட வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இதனைக் கூறினார்.
ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் எஸ்.எம்.முஹம்மது ஹனிபா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் பொதுநல நிறுவனங்களுக்கு உபகரணங்கள் கையளிக்கப்பட்டன.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் தற்போது அரசியல் யாப்பு சீர்திருத்தம் மேற்கொள்ளப்படுவது குறித்து முனைப்பான செயற்பாடுகள் நடைபெறுகின்றன. இதில் பெரும்பான்மையினரின் கட்சிகள் தேர்தல் தொகுதிகள் அதிகரிக்கப்பட வேண்டும் என குறிப்பிடுகின்றன. இந்த நிலைமை சிறுபான்மை இனங்களுக்கு பெரிதாக நன்மைதரப் போவதில்லை.
தேர்தல் முறை மாற்றத்தினால் சிறுபான்மை இன மக்களின் பிரதிநிதித்துவம் குறைவடையும் ஆபத்து எதிர்பார்க்கப்படுகிறது. சிறுபான்மை மக்களின் வாக்குப்பலத்தினால் பதவிக்கு வந்த ஜனாதிபதி அவர்கள் இந்த நிலைமையினை கருத்திற்கொள்ள வேண்டுமென வேண்டுகோள விடுத்திருக்கிறோம் என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply