ஸ்மார்ட் நகரங்களை உருவாக்குவதில் அமெரிக்க நிறுவனத்துடன் ஒப்பந்தம்: மத்திய மந்திரி சபை ஒப்புதல்

modiதலைநகர் டெல்லியில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நேற்று நடந்தது. இதில் நாடு முழுவதும் 100 ‘ஸ்மார்ட்’ நகரங்களை உருவாக்க வேண்டும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டத்தினை நிறைவேற்றுவதற்கு தேவையான உதவிகளைப் பெறும் வகையில், அமெரிக்காவில் நியூயார்க் நகரில் அமைந்துள்ள புளூம்பெர்க் பிலந்த்ரோபீஸ் நிறுவனத்துடன் மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்துவதற்கு மத்திய மந்திரிசபை அனுமதி வழங்கியது.

இந்த திட்டத்தின்கீழ், ‘ஸ்மார்ட்’ நகரங்களில், வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த ஏதுவாக அதிநவீன உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதில் புளூம்பெர்க் பிலந்த்ரோபீஸ் நிறுவனம் உதவும்.

 

ரெயில் உள்கட்டமைப்பு திட்டங்களை நிறைவேற்றுவதற்காக மாநிலங்கள், தனியார் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவதற்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் வழங்கியது.

 

இதன்கீழ் ஒவ்வொரு மாநிலத்துக்கும் மத்திய அரசு தலா ரூ.50 கோடி வழங்கும். ரூ.100 கோடி முதலீட்டுடன் கூட்டு நிறுவனங்கள் தொடங்கப்படும். இதன் மூலம் ரெயில் திட்டங்களில் மாநிலங்கள் முக்கிய பங்கு வகிக்க முடியும்.

 

சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டங்களில் மத்திய அரசு கூடுதல் கவனம் செலுத்துகிறது. அந்த வகையில், கிரிட் இணைப்புடன் கூடிய கூரை உச்சி சூரிய மின்திட்டங்களுக்கான பட்ஜெட்டை ரூ.600 கோடியில் இருந்து 8 மடங்குக்கு அதிகமாக ரூ.5 ஆயிரம் கோடி அளவுக்கு உயர்த்துவதற்கு மத்திய மந்திரி சபை ஒப்புதல் அளித்தது.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply