இராணுவ நடவடிக்கைகள் நிறுத்தப்படும் வரை ஜனாதிபதியை சந்திப்பதில்லையாம்:சம்பந்தன்

வடக்கில் தொடரும் இராணுவ நடவடிக்கைகள் நிறுத்தப்படும் வரை ஜனாதிபதியை சந்திப்பதில்லை என தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை இன்று மாலை சந்திப்பதில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

தாம் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள முடியாமை தொடர்பாக ஜனாதிபதிக்கு விளக்கமளிக்கும் கடிதம் ஒன்றை தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தயாரித்து வருகின்றனர்.

 ஜனாதிபதியின் மரியாதைக்குரிய அழைப்புக்கு இணங்க அவரை தற்போது சந்திப்பதில்லை என தாம் தீர்மானித்துள்ளமை குறித்து, ஜனாதிபதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் எதிர்காலத்தில் ஜனாதிபதியை சந்திக்க மாட்டோம் என்ற அர்த்தமாகாது எனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராஜா தெரிவித்துள்ளார். இது குறித்து ஊடக மாநாடு மூலம் தெளிவுப்படுத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட 14 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியின் அழைப்புத் தொடர்பாக தீர்மானிக்கும் கூட்டத்தில் கலந்துகொண்டதாகவும் தீர்மானம் குறித்து விளக்கமளிக்கும் ஊடக மாநாடு கொழும்பில் உள்ள விடுதி ஒன்றில் இன்று பிற்பகல் 2 மணிக்கு நடைபெற உள்ளதாகவும் பாதுகாப்பு காரணங்களுக்காக ஊடக மாநாடு எங்கு நடைபெறுகிறது என்பதை கூற முடியாது எனவும் மாவை.சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply