புத்தாண்டை முதன் முதலில் வரவேற்ற சமோவா மற்றும் கிரிபட்டி
பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள சின்னஞ்சிறிய தீவு நாடுகளான சமோவா மற்றும் கிரிபட்டி ஆகிய நாடுகள் புத்தாண்டை முதன் முதலில் கொண்டாடியுள்ளன. கிறிஸ்துமஸ் தீவு என்று அழைக்கப்படும் கிரிபட்டி நாட்டில் சுமார் 5,500 மக்கள் வசித்துவருகிறார்கள். 2016-ம் ஆண்டை முதல் முதலில் வரவேற்ற நாடு என்ற பெருமையை கிரிபட்டி பெற்றுள்ளது. கிரிபட்டியை போல் யு.டி.சி. நேரத்தை பின்பற்றும் சமோவாவும் 2016-ம் ஆண்டை வரவேற்ற முதல் நாடு என்ற பெருமையை பெற்றுள்ளது.இந்த ஆண்டோடு சேர்த்து 5-வது முறையாக புத்தாண்டை முதல் முதலில் வரவேற்ற நாடு என்ற பெருமையை சமோவா பெற்றுள்ளது.
நியூஸிலாந்து நாட்டின் ஆக்லாந்து நகரம் சமோவா மற்றும் கிரிபட்டி நாடுகளை தவிர்த்து புத்தாண்டை கொண்டாடிய உலகின் முக்கிய நகரம் என்ற பெருமையை தட்டி சென்றது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply