எந்தவொரு சவாலையும் சமாளிக்க இராணுவம் தயாராகவே உள்ளது :கிறிசாந்த டி சில்வா
எந்தவொரு சவாலையும் சமாளிக்க இராணுவம் தயாராகவே உள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கிறிசாந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.கொழும்பு இராணுவ தலைமையகத்தில் புதுவருடத்தை முன்னிட்டு படையினர் மத்தியில் உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். நாட்டின் இறைமை மற்றும் ஒற்றுமை என்ற விடயத்தில் முழு பொறுப்பும் தமதுடையது என்பது இராணுவத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் தெரிந்த விடயம்.இந்தநிலையில் பாதுகாப்பு விடயத்தில் எந்தவொரு சவாலையும் சமாளிக்க இராணுவம் தயாராகவே உள்ளது என்று தளபதி தெரிவித்துள்ளார்.பொதுமக்களுக்கும் நாட்டுக்கு விசுவாசமாக செயற்படுவதே போரில் இறந்த படையினருக்கு செலுத்தும் அஞ்சலியாக இருக்கும் என்றும் கிறிசாந்த குறிப்பிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply