சீனாவில் ஒரு குழந்தை திட்டம் முடிவுக்கு வந்தது: புத்தாண்டு முதல் 2 குழந்தை பெற அனுமதி

chinaஉலகிலேயே மக்கள் தொகை அதிகம் கொண்ட நாடாக சீனா முதலிடத்தில் உள்ளது. இங்கு 2015–ம் ஆண்டு கணக்கெடுப்புபடி மக்கள் தொகை 140 கோடியே 15 லட்சமாக உள்ளது.மக்கள் தொகை பெருக்கத்தால் சீனா பல்வேறு நெருக்கடிக்கு ஆளானது. உணவு தட்டுப்பாடு, வாகனம் மற்றும் குடியிருப்புகள் பெருக்கம், வேலையில்லா திண்டாட்டம் போன்றவை ஏற்பட்டது. இதையடுத்து கம்யூனிஸ்டு அரசாங்கம் அங்கு ஒரு குழந்தை திட்டத்தை அறிமுகப்படுத்தியது. 40 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த திட்டம் அமலில் இருந்து வந்தது.

இதனால் மக்கள் தொகை பெருக்கம் ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டது. ஆனால் மற்ற பிரச்சினைகள் உருவானது. தொழில் வளர்ச்சியில் வேகமாக முன்னேறிய சீனாவில் வேலைக்கு ஆட்கள் பற்றாக்குறை மற்றும் பாலியல் தொடர்பான குற்றங்கள் பெருகியது.

எனவே ஒரு குழந்தை திட்டத்தை தளர்த்தி 2 குழந்தை பெற்றுக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று அரசுக்கு பல்வேறு தரப்பில் சிபாரிசு செய்யப்பட்டது. ஆளும் கம்யூனிஸ்டு உயர் மட்டக்குழு 2 குழந்தை பெற்றுக் கொள்ள அனுமதிக்கலாம் என்று கடந்த அக்டோபர் மாதம் ஒப்புதல் அளித்தது.

இது தொடர்பான சட்டம் தேசிய பாராளுமன்றத்தில் கடந்த டிசம்பர் மாதம் நிறைவேறியது. அதில் ஜனவரி 1–ந் தேதி 2 குழந்தை பெற்றுக் கொள்ளும் திட்டம் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி ஒரு குழந்தை திட்டம் முடிவுக்கு வந்தது. புத்தாண்டு தினமான நேற்று முதல் 2 குழந்தை பெற்றுக் கொள்ளும் திட்டம் அமலுக்கு வந்தது. இந்த திட்டத்தை சீன தம்பதிகள் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply