ஷியா பிரிவு தலைவர் உள்பட சவுதி அரேபியாவில் இன்று ஒரேநாளில் 47 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
மன்னராட்சியின் கீழுள்ள சவுதி அரேபியா நாட்டில் இஸ்லாமிய ஷரீஅத் சட்டங்களின்படி, மத துவேஷம், கொலை, கற்பழிப்பு, போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஆயுதமேந்திய கொள்ளை ஆகிய கொடும் குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. அவ்வகையில், இன்று மட்டும் 47 பேரின் தலைகளை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. சவுதி அரேபியாவின் பிரபல ஷியா முஸ்லிம் இனத்தவர்களின் தலைவரான ஷேக் நிம்ர் அல்-நிம்ரிட்ஸ் மற்றும் 2003௨006-ம் ஆண்டுகளுக்கு இடையில் சவுதியில் தீவிரவாத தாக்குதல்களை நடத்திய அல் கொய்தா தீவிரவாதிகள் 46 பேருக்கு இன்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சவுதி வரலாற்றிலேயே அதிகபட்சமாக கடந்த 1995-ம் ஆண்டு 192 பேரின் தலைகளை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. கடந்த (2015) ஆண்டில் மட்டும் 157 பேருக்கு இதைப்போல் தலையை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
பிரபல ஷியா முஸ்லிம் இனத்தவர்களின் தலைவரான ஷேக் நிம்ர் அல்-நிம்ரிட்ஸ்-க்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும். அவருக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டால் சவுதி அரசு தேவையற்ற எதிர்விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும். அதற்கு பதிலாக மிகப்பெரிய விலையை தர வேண்டியதாகிவிடும் என ஷியா ஆதரவு நாடான ஈரான் முன்னர் எச்சரித்திருந்தது.
அந்த எச்சரிக்கையை பொருட்படுத்தாத சவுதி அரசு இன்று ஷேக் நிம்ர் அல்-நிம்ரிட்ஸ்-க்கும் மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது, குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply