விரைவில் விக்கியுடன் பேசி பேரவையில் இணைவேன்!: கருணா அம்மான்
தமிழ் மக்கள் பேரவையின் நோக்கங்கள் சிறந்ததாக இருப்பதனால், வடமாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவருமான சீ.வி.விக்னேஸ்வரனை விரைவில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தி அப்பேரவையில் உத்தியோகபூர்வமாக இணைந்து செயற்படவுள்ளேன் என கருணா தெரிவித்துள்ளார். புதிதாகத் தோற்றுவிக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் பேரவை தொடர்பில் கேட்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,
யுத்தத்தின் பின்னர் தமிழ் மக்களின் பிரச்சினைகளை முறையாக கையாள்வதற்கு சகல தமிழ் மக்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட தமிழ் மக்கள் பேரவை என்ற அமைப்பு கடந்த மாதம் உருவாக்கப்பட்டது.
யுத்தத்தின் பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்குரிய தலைமைததுவத்தை வழங்கத் தவறிவிட்டது. தற்போது அக்கட்சி உறுதியற்ற நிலையில் தனது நடவடிக்கைகளை முன்னெடுக்கிறது. அக்கட்சிக்குள் ஒருமித்த கருத்தை காணமுடியாதுள்ளது.
மேலும் போர்க்குற்ற விசாரணை தொடர்பில் உள்நாட்டில் ஒரு கருத்தையும் வெளிநாடுகளில் மற்றுமொரு கருத்தையும் வெளிக்காட்டியது.
அதுமாத்திரமல்லாமல் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள பலரும் விரைவில் தமிழ் மக்கள் பேரவையில் இணைந்து கொள்ளவுள்ளனர் என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply