புதுமாத்தளனில் போதியளவு உணவை கையிருப்பில் வைக்குமாறு ஜனாதிபதி பணிப்பு
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வேண்டுகோளின் பேரில் புதுமாத்தளனில் உணவுப் பொருட்களை கையிருப்பில் வைப்பதற்காக நாளை சனிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமை மேலும் 1020 மெற்றிக் தொன் உணவுப் பொருட்கள் அனுப்பி வைக்கப்படவிருப்பதாக இடர் முகாமைத்துவ மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.
இரண்டு வாரங்களுக்குத் தேவையான 1265 மெற்றிக் தொன் உணவுப் பொருட்கள், மருந்து கள் என்பவற்றுடன் கடந்த 21ம் திகதி திருகோண மலையிலிருந்து புதுமாத்தளனுக்கு ஒரு கப்பல் சென்றுள்ளது. இந்நிலையில் புதுமாத்தளனில் உணவுப் பொருட்கள் கையிருப்பில் வைக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி கேட்டுக்கொண்டதற்கமைய, புதிய கப்பலொன்றில் பொருட்கள் ஏற்றப்பட்டு வருவதாகவும் எதிர்வரும் சனிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமை அக்கப்பல் புதுமாத்தளன் நோக்கி புறப்படுமெனவும் அமைச்சர் மஹிந்த சமரசிங்க நேற்று ஜனாதிபதி செயலகத்தில் நடந்த செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply