தேசிய பொங்கல் விழாவுக்கு எதிர்ப்பு

neelakandanதைப்பொங்கல் தினத்தை வழிபாட்டுத் தினமாக அனுஷ்டிக்குமாறும், எவ்வித கொண்டாட்டங்களிலும் ஈடுபடவேண்டாம் என அகில இலங்கை இந்து மாமன்றம் தெரிவித்துள்ளது.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், தேசிய தைப்பொங்கல் விழா எதிர்வரும் 15ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதோடு, அதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.இத்தேசிய தைப்பொங்கல் விழாவை ஏற்க முடியாது என அகில இலங்கை இந்து மாமன்றத்தின் தலைவர் கந்தையா நீலகண்டன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நல்லாட்சி அரசங்கத்தின் கீழ் ஒரு சில நன்மையான விடயங்கள் எமது மக்களுக்கு கிடைத்தாலும் இன்னும் எம்மக்களில் சிலர் அரசியல் கைதிகளாகத் தொடர்ந்தும் சிறையில் வாடுவதும், இடம்பெயர்ந்து தமது வாழ்விடங்களை விட்டு முகாம்களில் வாழ்வதும் தொடர்ந்த வண்ணமே உள்ளன.

இவை தொடர்பாக அரசாங்கம் திருப்திகரமான நடவடிக்கைகள் எதனையும் எடுக்கவில்லை என்பதை வருத்தத்ததுடன் தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கின்றோம்.

தற்போது வடக்கில் இடம்பெயர்ந்த 36 நலன்புரி முகாம்களில் வாழ்ந்து வருகின்றார்கள்.

எனவே இந்த நிலை மாற்றமடைந்து மக்கள் சொந்த வீடுகளுக்கு திரும்புவதற்கும், சிறையில் வாடுகின்ற எம் இளைஞர்களுக்கு விடுதலை பெற்றுக்கொடுக்கவும் தைப்பொங்கல் தினத்தை இறைவழிபாட்டு நாளாக அனுஷ்டிக்க வேண்டுமே தவிர அதனை விழாவாக கொண்டாடுவதை நாம் ஏற்க முடியாது என அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply