தேர்தலில் அரசுக்கு உதவியவருக்கே எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட்டது: மகிந்த

MAHINDAதற்போதைய அரசாங்கத்தின் நல்லாட்சி பற்றி திருப்திப்பட முடியாதுள்ளதால் நாட்டின் நலனுக்காக பலமாக குரல் எழுப்பும் எதிர்க் கட்சி ஒன்றின் தேவை உணரப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு நேற்று விஜயம் செய்த முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட எம்.பியுமான மகிந்த ராஜபக்‌ஷ ஊடகவியலாளர் மத்தியில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி தொடர்ந்து தமது உரையில் தெரிவித்ததாவது,

 

“கடந்த தேர்தலின் போது அரசாங்கத்துக்காக உதவியவர்கள் எதிர்க் கட்சி தலைவர்களாகவும் எதிர்க் கட்சி அமைப்பாளராகவும் பதவி வகிக்கின்றனர். ஆகவே நாட்டின் எதிர்க் கட்சியாக குரல் எழுப்புவதற்கு புதிய கட்சியொன்று அவசியம். இன்று எனது சமையல் கட்டின் உபகரணங்கள் பற்றி ஆராய்கின்றனர். கழிவறை உபகரணங்கள் பற்றி ஆராய்கின்றனர். இதுபோல கடந்த பத்து வ ருடங்களாக நான் உண்ட, குடித்தவற்றை பற்றியும் ஆராய்கின்றனர்.

 

கடந்த தேர்தலில் நான் தோற்கடிக்கப்பட்டேன். ஜனாதிபதியாக பதவியேற்ற புதிய ஜனாதிபதியின் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு அவரை நான் வாழ்த்துகின்றேன். நல்லாட்சி பற்றி திருப்தியடைய முடியாது. மற்றும் நான் என்றுமே அதிகமாக பேசியதில்லை, அவசியமான வேளையில் அவசியமானதை பேசுவேன். இன்று எம்மை சிறையில் அடைப்பதாக கூறுகின்றார்கள்.

 

அவர்களுக்கு இவ்வாறு கூற முடிவது ஏனெனில் 30 ஆண்டுகள் இடம்பெற்ற குரூர யுத்தத்தை நாம் இல்லாமல் ஒழித்துள்ளோம். ஐ. தே. க.வினது கொள்கை மற்றும் அதன் சித்தாந்தங்களுடனும் இரண்டறக் கலந்து விட்டவர்கள் இன்று எம்மை சு. க. விலிருந்து விரட்டுவதற்கு முயற்சிக்கின்றனர். நான் ஒரு போதும் கட்சியை விட்டு செல்லவில்லை என்பதை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

 

திருமதி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க பாதுகாத்து முன்னெடுத்துச் சென்ற கொள்கைகளை தானும் முன்னெடுத்துச் சென்றதாகவும் தெரிவித்த அவர் இன்று ஐ. தே. க. வுடனான கொள்கைகளோடு இணைந்து எமது கட்சியின் சிலர் எம்மை துரத்துவதற்கு முயற்சிக்கிறனர் என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply