சீன தலைவர் மாவோவின் 118 அடி பிரமாண்டமான சிலை இடித்து தள்ளப்பட்டது

MASOசீனாவின் மக்கள் குடியரசுக் கட்சியின் தந்தையாகக் கருதப்படும் மாவோ சே துங்குக்கு ஹெனான் மாகாணத்தில் உள்ள கைபெங் நகரின் அருகே 36 மீட்டர் (118 அடி, 11 அங்குலம்) உயரத்தில் 30 லட்சம் யுவான்கள் (இந்திய மதிப்புக்கு சுமார் மூன்று கோடி ரூபாய்) செலவில் பிரமாண்டமான தங்கச்சிலையை உருவாக்கும் பணிகள் நடபெற்று வந்தது.உள்ளூரைச் சேர்ந்த தொழிலதிபர்கள் மற்றும் விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்ட நிதியின் மூலம் இந்த சிலையை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்பட்டது. சிலையை அமைக்கும் பணிகள் ஏறக்குறைய முடியும் தருவாயில் இருந்தன.

இந்நிலையில் இந்த பிரமாண்ட சிலையை அமைக்க அரசிடம் முறையான அனுமதி பெறவில்லை என்பதால் சிலையை இடிக்க உத்தரவிடப்பட்டது அதற்கான பணிகள் நடந்து வருவதாக சீன ஊடகங்கள் புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டுள்ளன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply