சோனியா காந்தியை மோடி சந்தித்தது மக்களை ஏமாற்றுவதற்கே: காங்கிரஸ் குற்றச்சாட்டு
சரக்கு மற்றும் சேவை வரி(ஜி.எஸ்.டி) மசோதா தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தது மக்களை ஏமாற்றுவதற்காகவே என்று அக்கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார். பாராளுமன்றத்தில் ஜி.எஸ்.டி மசோதாவை நிறைவேற்றவிடாமல் காங்கிரஸ் கட்சி முடக்குகிறது என்ற பா.ஜ.க.,வின் குற்றச்சாட்டிற்கு அவர் மறுப்பு தெரிவித்தார். இது குறித்து ஜெய்ராம் ரமேஷ் செய்தியாளர்களிடம் பேசுகையில், “ஜி.எஸ்.டி மசோதா நிறைவேறாததற்கு காரணம், அதனை பா.ஜ.க.,வும் பிரதமர் நரேந்திர மோடியும் விரும்பவில்லை என்பது தான். பா.ஜ.க., மக்களை ஏமாற்றுகிறது.
ஜி.எஸ்.டி மசோதாவை கொண்டு பா.ஜ.க., நாட்டை தவறாக வழிநடத்துகிறது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைமையிலான ஆட்சியில் தான் ஜி.எஸ்.டி மசோதா மார்ச் 2011-ல் கொண்டு வரப்பட்டது. ஆனால் மசோதா ஆகஸ்ட் 2013-ல் திருப்பி அனுப்பப்பட்டது. அதற்கு காரணம் நரேந்திர மோடி தலைமையிலான குஜராஜ் அரசு போராட்டம் தான்.” என்று கூறினார்.
முன்னதாக ஜி.எஸ்.டி மசோதா தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி, சோனியா காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரை கடந்த நவம்பர் மாதம் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் கடந்த வியாழக்கிழமை ஜனவரி 7-ம் தேதி நாடாளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி வெங்கையா நாயுடு ஜி.எஸ்.டி மசோதாவை நிறைவேற்றுவது குறித்து சோனியா காந்தியை சந்தித்து பேசினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply