செவ்வாயன்று ஆஜராகுமாறு ஹிருணிகா எம்.பிக்கு உத்தரவு
இளைஞனை கடத்திய குற்றச்சாட்டில் கொழும்பு குற்றப்பிரிவினாரால் நேற்று சனிக்கிழமை கைதுசெய்யப்பட்ட ஐக்கிய தேசியக்கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர, கொழும்பு நீதவானால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலேயே அவர், விடுவிக்கப்பட்டுள்ளார். அவரை எதிர்வரும் 12ஆம் திகதி செவ்வாய்க்கிழமையன்று நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதவான், நேற்று உத்தரவிட்டுள்ளார். தெமட்டகொடை பிரதேசத்தில் நபரொருவரை கடத்திய சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இவர், கொழும்பு குற்றப்பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply