இலங்கைக்கு பாரியளவில் அபிவிருத்தி உதவிகளை வழங்கும் அமெரிக்கா!
இலங்கைக்கு பாரியளவில் அபிவிருத்தி உதவிகளை வழங்க அமெரிக்கா தீர்மானித்துள்ளதாக ராஜதந்திர வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.இலங்கைக்கு அபிவிருத்தி உதியாக 80 கோடி அமெரிக்க டொலர்களை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.நீண்ட இடைவெளியின் பின்னரே இலங்கைக்கு, அபிவிருத்தி உதவிகளை வழங்க அமெரிக்கா தீர்மானித்துள்ளது. இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைய இவ்வாறு நிதி உதவி வழங்கப்பட உள்ளது.அமெரிக்காவின் மிலேனிய சவால் அபிவிருத்தி நிதியத்தின் ஊடாக இவ்வாறு உதவி வழங்கப்பட உள்ளது. நாட்டின் அபிவிருத்தியை துரிதப்படுத்திக் கொள்ள அமெரிக்கா இவ்வாறு உதவிகளை இந்த ஆண்டில் வழங்க உள்ளது. இரண்டு கட்டங்களாக இந்த உதவியை வழங்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் அமெரிக்கா இலங்கைக்கான உதவிகளை மிகவும் வரையறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply