23 அல்-கொய்தா தீவிரவாதிகள் உட்பட ரஷியாவின் குண்டு மழையால் சிரியாவில் 81 பேர் பலி

suriyaசிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் சண்டையிட்டு வருகின்றனர். மற்றொரு பக்கம் சர்வதேச நாடுகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் ஐ.எஸ். தீவிரவாதிகளும் அங்கு ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில், தற்போது அல்–கொய்தா தீவிரவாதிகளும் சிரியாவில் பல்வேறு நகரங்களை தங்களது பிடியில் வைத்துக்கொண்டு அரசுக்கு தொந்தரவு கொடுத்து வருகின்றனர். சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு ஆதரவாக, அரசுக்கு எதிராக சண்டையிட்டு வரும் அனைத்து தரப்பினரையும் குறிவைத்து ரஷியா வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகிறது. 

 

வடமேற்கு பகுதியில் உள்ள இட்லிப் மாகாணத்தில் அல்–கொய்தா தீவிரவாதிகளின் பிடியில் உள்ள மாராத் அல் நுமான் நகரை குறிவைத்து நேற்று முன்தினம் ரஷியா தனது போர் விமானங்கள் மூலம் குண்டுமழை பொழிந்தது. அந்த நகரில் உள்ள சிறைச்சாலை, நீதி மன்றம் மற்றும் சந்தை பகுதி ஆகியவற்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 23 அல்-கொய்தா தீவிரவாதிகள் உட்பட சிறைக்கைதிகள் அப்பாவி பொதுமக்கள் என மொத்தம் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 81-ஐ எட்டியுள்ளதாக சிரியாவின் மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

 

மேலும் இந்த தாக்குதலில் ஏராளமானோர் படுகாயம் அடைந்திருப்பதாலும், அவர்களில் பலரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply