பதான்கோட் தாக்குதலுக்கு பாகிஸ்தான்மீது பழிசுமத்துவதா?: முன்னாள் அதிபர் முஷரப் பாய்ச்சல்

musarafபஞ்சாப் மாநிலம், பதான்கோட்டில் உள்ள விமானப்படை தளத்துக்குள் கடந்த 2–ந்தேதி புகுந்த பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் ஆறு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்திய பாதுகாப்பு படையை சேர்ந்த ஏழு பேர் வீரமரணம் அடைந்தனர்.பாகிஸ்தானில் இருந்தவர்களுடன் இந்த தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் தொடர்பு கொண்டு பேசிய டெலிபோன் நம்பர்கள் மற்றும் பல்வேறு ஆதாரங்களை இந்திய அரசு பாகிஸ்தானிடம் அளித்தது. தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர்கள், பின்னணியாக இருந்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வற்புறுத்தியது.

இந்நிலையில், பதான்கோட் விமானப்படை தள தாக்குதல் குறித்து இந்தியா பெரிதுப்படுத்தக்கூடாது என பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப் கூறி உள்ளார்.

பாகிஸ்தான் செய்தி சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் அவர் கூறி இருப்பதாவது:-

தீவிரவாத தாக்குதல் தொடர்பாக இந்தியா சாதாரணமாக பாகிஸ்தான் மீது அழுத்தத்தை உருவாக்க முடியாது. நாங்கள் ஒரு சிறிய நாடாக இருக்கலாம். ஆனால், எங்களுக்கு என சுயமரியாதை உள்ளது. இந்தியாவின் பல பகுதிகளில் தீவிரவாதம் தலைவிரித்தாடுகிறது. தீவிரவாதத்தை எப்போதுமே ஒருபக்க பிரச்சனையாகவே இந்தியா பார்க்கிறது.

இது என்னை கொதிப்படைய செய்துள்ளது. அங்கு ஏதாவது நடக்கும்போது இந்தியா எங்களை தாக்க கூடாது. பதான்கோட் விமானப்படை தள தாக்குதலை இந்தியா பெரிது படுத்துகிறது. இரு நாடுகளுமே தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டு உள்ளது. ஆனால், தீவிரவாதம் குறித்து பாகிஸ்தானை இந்தியா குற்றம் சொல்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply