இந்திய மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இத்தாலி கடற்படை வீரர் இந்தியா திரும்ப மாட்டார்

f5f6d570-05f8-4dc8-ab83-a12ed2c0ede1_S_secvpfஇந்திய மீனவர்கள் இருவர் கேரளக் கடற்பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட இத்தாலி கடற்படை வீரர் லத்தோர் இந்தியா திரும்ப வாய்ப்பில்லை என்று அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார். கடந்த 2012-ஆம் ஆண்டு பிப்ரவரியில், கேரளக் கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் இருவரை இத்தாலி கடற்படை வீரர்கள் சுட்டுக் கொன்றனர். கடல் கொள்ளையர்கள் எனக் கருதி மீனவர்களை சுட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.  இதையடுத்து கடற்படை வீரர்கள் மாசிமிலியானோ லட்டோர், சால்வடோர் கிரோன் ஆகிய இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்த போலீசார், அவர்களைக் கைது செய்தனர்.

 

இந்த நிலையில், மூளை நரம்பு தொடர்பான நோயால் பாதிக்கப்பட்ட லட்டோர், தனது தாய்நாட்டுக்குச் சென்று 4 மாதங்கள் சிகிச்சை பெற உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு அனுமதி அளித்தது. பிறகு இந்த கால அவகாசம் மேலும் 6 மாதங்கள் நீட்டிக்கப்பட்டது. தற்போது அந்த அவகாசமும் இன்றுடன் (ஜன.13) நிறைவடையவுள்ள நிலையில், இத்தாலி நாடாளுமன்ற உறுப்பினர் நிகோலா லட்டோர், இதுதொடர்பாக அந்நாட்டு செய்தி நிறுவனமொன்றுக்குப் பேட்டி அளித்துள்ளார்.

 

அந்த பேட்டியில், மூளை நோயால் பாதிக்கப்பட்ட மாசிமிலியானோ லட்டோர் மீண்டும் இந்தியா திரும்ப வாய்ப்பில்லை என்றும், சால்வடோர் கிரோனையும் இத்தாலிக்கு அழைத்துச் செல்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply