இன்று தலைவர் சம்பந்தனுடன் முக்கிய பேச்சு நடத்துவுள்ள ஜெய்சங்கர்
இந்திய வெளிவிவகார செயலாளர் எஸ்.ஜெய்சங்கருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையில் கொழும்பில் இன்று முக்கிய சந்திப்பு இடம்பெறவுள்ளது. இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்திய வெளிவிவகார செயலாளர் ஜெய்சங்கர் நேற்று இலங்கை வந்தார்.இலங்கை – இந்திய கூட்டு ஆணைக்குழுவின் நடவடிக் கைகளை ஆராய்வதற்கும் அதற்கான முன்னேற்பாடுகளைப் பார்வையிடுவதற்குமே இந்திய வெளிவிவகார செயலாளர் ஜெய்சங்கர் இலங்கை வந்துள்ளார். இவர் இந்த விஜயத்தின்போது அரச உயர்மட்டத் தலைவர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆகியோரை சந்தித்துப் பேச்சு நடத்தி வருகிறார்.
இந்நிலையில், கொழும்பில் இன்று காலை எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான சம்பந்தனை சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார். வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் நிகழ்கால விடயங்கள் தொடர்பில் இதன்போது சம்பந்தனிடம் ஜெய்சங்கர் கேட்டறிவார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply