சிவாஜிலிங்கம் தலைமையில் யாழில் கறுப்பு கொடிப் போராட்டம்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் யாழ்ப்பாணத்திற்கான விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வடமாகாண சபை உறுப்பினர் எம்.ஏ.சிவாஜிலிங்கம் தலைமையில் கறுப்பு கொடி ஏந்தி போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த போராட்டம் புதன்கிழமை முற்பகல் யாழ்ப்பாணம் பேரூந்து நிலையத்திற்கு முன்னால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இனப்படுகொலை, போர்க்குற்றங்கள் ஆகியவற்றிற்கு எமக்கு நீதி தேவை, தமிழ்த் தேசிய இனப் பிரச்சினைக்கு இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றை மூன்றாம் தரப்பு மத்தியஸ்தமாகக் கொண்டு நிரந்த தீர்வு காண வேண்டும்,
இராணுவத்தினர் மற்றும் கடற்படையினர் வசமுள்ள தமிழ் மக்களின் நிலங்கள் விடுவிக்கப்படுகின்ற போதிலும் ஆயிரக் கணக்கான நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவதை நிறுத்த வேண்டும், இராணுவ மயமாக்கலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
காணாமல் போனோர், கடத்தப்பட்டோர், சரணடைந்தோர், ஆகியோரின் குடும்பங்களுக்கு அரசாங்கம் பதில் கூற வேண்டும்.
அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டும் இல்லையேல் புனர்வாழ்வு வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்தே இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதில் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன், காணாமல் போனோரின் உறவினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply