அமெரிக்காவில் ரூ.10 ஆயிரம் கோடி ஜாக்பாட் பரிசு பெற்ற 3 அதிர்ஷ்டசாலிகள் யார்?

usaஅமெரிக்காவில் ஜாக்பாட் பரிசு சீட்டு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.160 கோடி டாலர் (சுமார் 10 ஆயிரத்து 50 லட்சம் கோடி) பரிசுத் தொகையுடன் கூடிய லாட்டரி விற்பனை செய்யப்பட்டது.அதற்கு ‘பவர்பால்’ ஜாக்பாட் என பெயரிடப்பட்டது. அந்த நாட்டின் 44 மாகாணங்கள், வாஷிங்டன், வர்ஜின் தீவுகள், புவர்டிரிக்கோ தீவுகள் ஆகிய பகுதிகளில் விற்பனை செய்யப்பட்டது.8,27,34,4, 19 மற்றும் பவர் பால் 10 என்ற நம்பருடைய சீட்டுக்கு ரூ.10 ஆயிரம் கோடி ஜாக்பாட் பரிசு தொகை விழுந்துள்ளது. அவற்றை கலிபோர்னியா, டென்னிசே மற்றும் புளோரிடா ஆகிய 3 மாகாணங்களில் விற்பனை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

ஆனால் அந்த பரிசு சீட்டுகளை பெற்ற அதிர்ஷ்ட சாலிகள் யார்? என தெரியவில்லை. அவர்களுக்கு தலா ரூ.3 ஆயிரம் கோடியே 33 லட்சம் வரை பரிசு தொகை கிடைக்கும் என தெரிகிறது.

கலிபோர்னியாவில் ஜாக்பாட் லாட்டரி சீட்டை விற்பனை செய்த கடை உரிமையாளர் பல்பீர் அத்வால் கூறும் போது தனக்கு கிடைக்கும் கமிஷன் தொகை ரூ.6 கோடியை வறுமையால் வாடும் தனது சமூக மாணவர்களுக்கு கல்வி உதவி தொகையாக வழங்க இருப்பதாக கூறினார்.

இது தனது மிகப்பெரும் கனவு என்றும், இது போன்ற மேலும் பலருக்கு பலவிதங்களில் உதவி செய்ய விரும்புவதாகவும் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply