விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்?

vikiவட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்படக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொள்கைகளுக்கு புறம்பான வகையில் செயற்பட்டால் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர நேரிடும் என மாகாணசபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.வடமாகாணசபை உறுப்பினர்களுக்கும் விக்னேஸ்வரனுக்கும் இடையில் இன்று விசேட பேச்சுவார்த்தையொன்று நடத்தப்பட உள்ளது. கடந்த வாரமும் இவ்வாறான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இந்தப் பேச்சுவார்த்தைகளின் தொடர்ச்சியாக இன்றைய சந்திப்பு நடைபெறும் என வட மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

எனினும், விக்னேஸ்வரனை பதவி விலகுமாறு கோரவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, விக்னேஸ்வரன் தலைமயிலான தமிழ் மக்கள் பேரவை கலைக்கப்பட உள்ளதாக சிலுமின தகவல் வெளியிட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராக உருவாக்கப்பட்ட அமைப்பு என கருதப்படும் தமிழ் மக்கள் பேரவை கலைப்பு பற்றி இன்றைய தினம் விக்னேஸ்வரன் பகிரங்கமாக அறிவிப்பார் என அந்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

அவ்வாறு தமிழ் மக்கள் பேரவையை கலைக்காவிட்டால், விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படும் என மாகாணசபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளதாக சிலுமின் தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில் வி;க்னேஸ்வரன் இன்றைய தினம் தமிழ் மக்கள் பேரவையை கலைப்பது குறித்து அறிவிப்பார் என தெரிவித்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply