எலிகளைப்போல் புதிய மருந்து பரிசோதனைக்கு மனிதர்களை பயன்படுத்தும் அவலம்: பிரான்சில் ஒருவர் பலி
பிரான்ஸ் நாட்டில் மருத்துவ பரிசோதனையில் ஏற்பட்ட பெரிய அசம்பாவித சம்பவமாக பரிசோதனைக்குள்ளாகி மூளைச்சாவு ஏற்பட்ட ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.போர்சுகீஸ் நாட்டை சேர்ந்த பிரபல மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்பான வலிநிவாரணி மருந்தை சோதிப்பதற்காக ஆறு பேர் பயன்படுத்தப்பட்டார்கள். இந்த சோதனை வடமேற்கு பிரான்சில் உள்ள ரென்னெஸ் ஐரோப்பிய ஆய்வகத்தில் நடைபெற்றது. அப்போது இந்த துயர சம்பவம் நடைபெற்றுள்ளது. இதில் ஒருவர் மூளைச்சாவு ஏற்பட்ட நிலையிலும், மேலும் ஐந்து பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த சோதனை உடனடியாக நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், மூளைச்சாவு அடைந்த நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். சிகிச்சை பெற்றுவரும் ஐந்து பேரும் குணமடைந்து வருவதாகவும், அவர்களில் மூவருக்கு சரிப்படுத்த முடியாத பக்கவாத பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் ரென்னெஸ் ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply