டெல்லியில் கடும் பனிமூட்டம்: 21 ரெயில்கள் ரத்து

new dilliடெல்லியில் கடந்த சில நாட்களாக காலை நேரத்தில் கடும் குளிரும், அடர்ந்த பனி மூட்டமும் நிலவி வருகிறது. இது நேற்றும் தொடர்ந்தது. நேற்று காலையில் டெல்லியின் குறைந்தபட்ச வெப்பநிலையாக 6 டிகிரி செல்சியஸ் பதிவானது.இதைப்போல கடும் பனிமூட்டத்தால் காலை 5.30 மணியளவில் 200 மீட்டர் தூரத்தில் உள்ள பொருட்களையே மக்களால் பார்க்க முடிந்தது. இது 8.30 மணியளவில் 400 மீட்டராக அதிகரித்தது. இந்த பனிமூட்டத்தால் சாலை போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டது.

மேலும் ரெயில் போக்குவரத்தும் கடுமையாக பாதிப்படைந்தது. டெல்லியில் இருந்து புறப்பட வேண்டிய 21 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. டெல்லிக்கு வந்த 10 ரெயில்கள் தாமதமாக வந்து சேர்ந்தன. இதனால் ரெயில் பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர்.

இந்த மோசமான வானிலையால் விமான சேவையும் லேசான பாதிப்பை சந்தித்தது. சில விமானங்களின் இயக்கம் தாமதமானது. எனினும் எந்த விமானமும் ரத்து செய்யப்படவோ, திருப்பி விடவோ இல்லை.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply