புலிகளின் பிடியிலுள்ள மக்களை விடுவிப்பதே அரசின் முக்கிய பணி:அமைச்சர் சமரசிங்க

புலிகளின் பிடியில் உள்ள பொதுமக்களை விடுவித்துக் கொள்ளாதே அரசாங்கத்தின் தற்போதைய முக்கிய பணியாகுமென்று இடர் முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க வாரமஞ்சரிக்குத் தெரிவித்தார். எனவே, புலிகள் தமது பிடியில் உள்ள மக்களை விடுவிப்பதற்கு ஐ. நா. உள்ளிட்ட அமைப்புகள் அழுத்தம் கொடுக்க வேண்டுமென அமைச்சர் சமரசிங்க தெரிவித்தார்.

புலிகள் ஆயுதங்களைக் கீழே வைத்து விட்டால், யுத்த நிறுத்தம் தானாகவே ஏற்பட்டுவிடும், எனவே யுத்த நிறுத்தம் கோருபவர்கள் முதலில் அதற்கு வழிவகுக்க வேண்டும் என்று தெரிவித்த அமைச்சர் மஹிந்த சமரசிங்க, ‘ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் உத்தியோகப்பற்றற்ற முறையில் இலங்கை விவகாரம் கலந்துரையாடப்பட்டுள்ளது. இது தொடர்பில் இலங்கைத் தூதுவர் ஊடாக நிலைமை விளக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். அதேவேளை வட பகுதியில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply