சோமாலியா ஓட்டல் மீது குண்டு வீச்சு துப்பாக்கிச்சூடு: அப்பாவி பொதுமக்கள் 20 பேர் பலி
சோமாலியா நாட்டின் தலைநகர் மொகதிஷூவில் உள்ள பிரசித்தி பெற்ற கடற்கரையோர உணவு விடுதி ஒன்றில் அப்பாவி பொதுமக்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு மற்றும் துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 20 பேர் பலியாகியிருப்பதாக அந்நாட்டு போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு அல்-கொய்தாவுடன் தொடர்புடைய ஷெபாப் தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர். தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளில் 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். ஒருவனை போலீசார் கைது செய்துள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply