காணமல் போனோர் மற்றும் அரசியல் கைதிகள் தொடர்பில் பிரதமரின் கருத்துக்கள் வேதனையளிக்கின்றது :உதயராசா

uthayanஒட்டுமொத்த தமிழ் மக்களின் எதிபார்ப்பாக உள்ள காணமல் போனோர் மற்றும் அரசியல் கைதிகள் தொடர்பிலான தீர்வில் மாறிமாறி வரும் அரசுகள் காட்டிவரும் மெத்தனப்போக்கின் உச்ச கட்டமாக அண்மையில் பிரதமரின் கூற்றுக்கள் அமைந்துள்ளமை வேதனையையும் ஏமாற்றத்தையும் அளிக்கின்றது .பல வாக்குறுதிகளுடனும் தமிழ் மக்களின் நம்பிக்கையுடனும் ஆட்சிக்கு வந்த புதிய அரசாங்கம் காணமல் போனோர் மற்றும் அரசியல் கைதிகள் தொரர்பில் சாதகமான தீர்வினை வழங்குவார்கள் என நம்ம்பியிருந்த மக்களுக்கு தீர்வை வழங்குவதை விடுத்து அவ்வாறான பிரச்சனைகளே இல்லை என காட்டும் முயற்சியில் இறங்கியுள்ளமையையே பிரதமரின் செயற்பாடுகள் வெளிப்படுகின்றது .

அண்மையில் யாழ்பாணத்தில் இடம்பெற்ற பொங்கல் விழாவில் பேசிய பிரதமர் “காணாமல் போனவர்கள் உயிருடன் இருப்பதற்கான சாத்தியங்கள் குறைவு” எனவும் சுவிஸில் இடம்பெற்ற உலக பொருளாதார மாநாட்டில் கலந்துகொண்டபோது சர்வதேச ஊடகங்களிடம் “நாட்டில் அரசியல் கைதிகளென யாரும் இல்லை” எனவும் குறிப்பிட்டுள்ளமை அரசாங்கத்தின் நிலையை தமிழ் மக்களுக்கு உணத்தியுள்ளது இதனை வன்மையாக கண்டித்து விளக்கம் கோரவேண்டிய தமிழ் பிரதிநிதிகள் அரசாங்கத்திற்கு விசுவாசமாக செயற்படுவதுடன் ஒருபடி மேலே சென்று கிளிநொச்சியில் இடம்பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒன்றுகூடலின்போது நியாயம் கேட்க வந்த மக்களை இலங்கை காவல் துறையினரை வைத்து தடுத்து நிறுத்தியுள்ளமை நம்பி வாக்களித்த மக்கள் கூட்டுச்சதிக்குள் மாட்டிவிட்டோமோ ? என நினைக்கும் அளவிற்கு இட்டுச்சென்றுள்ளது. அரசியல்கைதிகள் இல்லையென கூறும் பிரதமர் அன்மைக்காலங்களில் பாரிய அளவில் நடந்த அரசியல்கைதிகளின் போராட்டமென நாட்டின் அனைத்து ஊடகங்களிலும் காட்டப்பட்ட போராட்டங்களையும் 2015ம் ஆண்டுக்குள் அரசியல் கைத்திகளின் பிரச்னைக்கு சரியான தீர்வினை வழங்குவேன் என ஜனாதிபதி வாக்குறுதி அளித்தமையும் எந்த அரசியல்கைதிகளுக்கு எனவும் வாக்குறுதிகள் எதன் அடிப்படையில் வழங்கப்பட்டது எனவும் தெளிவுபடுத்த முடியுமா? அதேபோன்று காணாமல் போன பெண்பிள்ளைகளின் புகைப்படங்கள் கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது தற்போதைய ஜனாதிபதிக்கு ஆதரவாக வெளியிடப்பட்ட பிரசுரத்தில் அடையாளம் கானப்பட்டமையினையும் மறுக்கமுடியுமா ? எனவே இவ்வாறான ஒன்றுக்கு ஒன்று முரணான கருத்துக்களையும் செயற்பாடுகளையும் விடுத்து அரசாங்கம் இதய சுத்தியுடன் செயற்பட வேண்டுமென கோருவதுடன் தமிழ் மக்களின் வாக்குகளில் வெற்றிபெற்று தமிழ் மக்களை தொர்ந்து ஏமாற்றிவரும் தமிழ் பிரதிநிதிகளும் உங்களது சுயநலன்களுக்கு அப்பாற்சென்று அரசாங்கத்திற்கு சரியான அழுத்தத்தை வழங்க வேண்டுமெனவும் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் கேட்டுக்கொள்கின்றேன். .

நன்றி

ப. உதயராசா
செயலாளர் நாயகம்
ஸ்ரீ ரெலோ

மூலம்/ஆக்கம் : TELOnews


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply