ஜனாதிபதியின் கூற்றுக்கு கூட்டமைப்பு கடும் கண்டனம்!

tnaஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு அமைவாகஇலங்கையில் இடம்பெற்ற யுத்தக்குற்றங்கள் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுக்கும் போது வெளிநாட்டு நீதிபதிகளை ஈடுபடுத்தப் போவதில்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளமைக்கு எதிர்க்கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது.ஐநா மனித உரிமைகள் பேரவையில் கடந்த வருடம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இலங்கையும் ஏற்றுக்கொண்டு அதனை முழுமையாக நடைமுறைப்படுத்துவதாக உறுதிமொழி வழங்கியிருந்தது.

இவ்வாறு அரசாங்கம் சர்வதேசத்துக்கு வழங்கிய வாக்குறுதியை ஒருபோதும் மீறமுடியாதென வலியுறுத்தியுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு அழுத்தங்களை வழங்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்றதாக கூறப்படும் மனிதஉரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்ற விசாரணைகளில் வெளிநாட்டு நீதிபதிகளுக்கு இடமில்லை. அது குறித்த விசாரணைகள் முற்றிலும் உள்நாட்டு விசாரணையாகவே அமையுமென ஜனாதிபதி சிறிசேன தெரிவித்திருந்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply